gG1PKgy4DkMafyHSzZtJ-Q5AleI Find us on Google+ Tamil Nadu News: Blog Confluence[Danger Help]

Thursday, July 19, 2012

Blog Confluence[Danger Help]

                                    பனைமரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் தான் என்பார்கள். அது போன்ற நாம் உதவி செய்தால்!இப்படித்தான் நான் ஒரு நாள் வங்கி ஒன்றிற்கு சென்றேன்.என்னுடைய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது என்னுடைய அருகில் ஒரு நோக்கியா செல்போன் இருந்தது.
 அதை எடுத்து பார்த்தால் எண்கள் தெரியாமல் அனைந்துயிருந்தது,மேலும் யாராவது கேட்டால் தரலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன் .சுமார் அரைமணி நேரம் யாரும் செல்போனில் தொடர்பு கொள்ளவில்லை,தேடவில்லை.இதனால் நான் தொடர்புக்கொண்டால் பேசிதரலாம் என்று எனது வீட்டிற்கு சென்றுப்பார்த்தால் அந்த செல்போன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுயிருந்தது ஆன் செய்தாலும் இயங்கவில்லை.
பிறகு நான் அந்த செல்போனில் சார்ஜ் செய்து இயங்கவைத்து பார்த்துக்கொண்டு இருக்கும் போது யாரோ ஒரு நபர் என்னிடம் தொடர்புக்கொண்டு செல்போன் பற்றி விசாரிக்க நானும் இருப்பதைச் சொல்ல அவர் என்னிடம் எங்கு எடுத்திருந்த இடத்தில் வரவேண்டும் என்றார்.நான் முடியாது என்னிடம் வாருங்கள் தருகிறேன் என்றேன் ஏன்னென்றால் செல்போன் தவறவிட்டது அவர்கள் தான்.
உடனே அவர் இங்கு வந்து தராமல் இருந்தால் போலிஸ் போன் செய்வோம் என்றார்.பிறகு என்ன பிரச்சனை வேண்டாம் என்று நானேசென்று உரியவர்யிடம் ஒப்படைக்க சென்றால், வங்கி மேனஜர் முதற்கொண்டு எல்லாம் நபர்களும் நான் செய்தது குற்றம் என்றே பேசினர் .நான் நடந்த உண்மையை எடுத்து சொல்லியும்,அவர்கள் என்னை கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்ததனர்,பார்த்தீர்களா நன்மை செய்யபோக கேடு வந்தது நான் செய்தது சரியா? தவறா?  

No comments: